தேர்தல் தோல்வியால் திமுகவில் அதிரடி மாற்றம்? திமுகவில் பதவி பெறப்போகும் இளைஞர்கள்.. ஸ்டாலின் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல், 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக, தற்போது கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை மீண்டும் தங்கள் பக்கம் திருப்புவதற்காக, மாவட்டச் செயலாளர் பதவிகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த திமுகவுக்கு, தவெகவின் எழுச்சி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும், முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், “அமைப்பு ரீதியாக பெரிய மாற்றங்கள் செய்யப்படும்” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், “உழைக்கத் தயாராக இல்லாத மாவட்டச் செயலாளர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம்” என்றும் அவர் நேரடியாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. பல மாவட்டங்களில் ஒரே மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 4 முதல் 5 சட்டமன்றத் தொகுதிகள் வரை உள்ளன. இதனால் சில மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்குள் மிகுந்த அதிகாரம் செலுத்துவதாகவும், “குறுநில மன்னர்கள்” போல் செயல்படுவதாகவும் கட்சியினரே குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையை மாற்றுவதற்காக, இனிமேல் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய அமைப்பு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனித்துள்ள ஸ்டாலின், இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்புகளை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞரணியில் இருந்து பல நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், பெண்களுக்கும் மாவட்டச் செயலாளர் பதவிகளில் முக்கிய இடம் வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை மீண்டும் திமுக பக்கம் ஈர்க்க இது உதவும் என ஸ்டாலின் நம்புவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சமூக வலைதள அரசியலிலும் திமுக தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இனி ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் தனிப்பட்ட ஐடி மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம், திமுகவில் அடுத்த சில மாதங்களில் அமைப்பு ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dramatic changes in DMK due to election defeat Youths who will get posts in DMK Stalin decision


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->