அலர்ட்! காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு...?
Which districts likely experience heavy rain until 10 am
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும், மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான சாரல் மழை பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர தமிழக பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்யும் சூழல் நிலவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலில், தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Which districts likely experience heavy rain until 10 am