கரைபுரளும் உற்சாகம்...! ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் செல்ல தடையற்ற அனுமதி...! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசியதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடை தற்போது விலக்கப்பட்டுள்ளதால், நான்கு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டும் உற்சாகத்துடன் கடலுக்குப் புறப்படத் தயாராகியுள்ளனர்.

கடலின் சீற்றம் அதிகரித்ததையும், பலத்த காற்று தொடர்ந்து வீசியதையும் தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இதனால் கடந்த நான்கு நாட்களாக மீன்பிடித் தொழில் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்தநிலையில், கடலில் நிலவிய கொந்தளிப்பு படிப்படியாக தணிந்ததுடன், காற்றின் வேகமும் கணிசமாகக் குறைந்ததால், மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மீன்வளத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராமேசுவரத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதலே விசைப்படகு மீனவர்கள் மீன்வளத் துறையின் டோக்கன் மையங்களில் அனுமதி சீட்டுகளைப் பெற்று, வழக்கம்போல் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட உள்ளனர்.

அதேபோல், மண்டபம் பகுதிக்குட்பட்ட விசைப்படகு மீனவர்களும் இன்று முதல் மீன்பிடித் தொழிலை மீண்டும் தொடங்கி கடலுக்குச் செல்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Excitement spreading shores Fishermen Rameswaram and Mandapam allowed go fishing without any hindrance from today


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->