ரீல்ஸ் மோகத்தால் கம்பி எண்ணும் வாலிபர்கள்...! சென்னை எண்ணூரில் ஆபத்தான பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


சென்னை தாழங்குப்பம் கடற்கரை சாலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து, அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மூன்று இளைஞர்களை காவலர்கள் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையை சில இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்குவதற்கும், ஒற்றைச் சக்கரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கும், கைகளை விட்டபடி பயணிப்பதற்கும், போக்குவரத்து விதிகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலான ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாகசங்களை காணொளியாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ வடிவில் பதிவேற்றி அதிக பார்வைகளையும் புகழையும் பெறும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், அதே சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருந்தது.

குறிப்பாக, குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகியிருந்ததாகவும், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணித்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் ஆபத்தான முறையில் பைக் சாகசங்களில் ஈடுபட்ட ஆகாஷ், பிரவீன் குமார் மற்றும் தினேஷ் பாபு ஆகிய மூவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளப் புகழுக்காக உயிரையும், பிறரின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youths reels due their passion 3 people involved dangerous bike adventure Ennore Chennai arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->