அலட்சியமாக இருந்தால் ஆக்ஷன் தான்...! அமைச்சர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு...என்ன தெரியுமா...?
If you negligent action taken action order issued minister do you know what
தமிழக அரசில் அமைச்சர்களின் ஆய்வுப் பயணங்களைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நிர்வாக ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் முக்கியமான புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றார்.

அவரது அமைச்சரவையில் த.வெ.க.வைத் தவிர, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் சார்பில் 2 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவரும் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.தற்போது 2026–27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அமைச்சர்களும் தங்களது துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், முதல்-அமைச்சர் விஜய்யும் தினமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து, துறைகளின் தேவைகள், புதிய திட்டங்கள் மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில அமைச்சர்கள் தங்களது துறைக்கு அப்பாற்பட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் பரவலான விவாதத்தை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஆளும் கூட்டணிக்கு தேவையற்ற சர்ச்சையையும் அரசியல் அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு அமைச்சரும் தங்களது பொறுப்பில் உள்ள துறைகளில் மட்டுமே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிற துறைகளின் செயல்பாடுகளில் ஆய்வு மேற்கொள்ளவோ தலையிடவோ கூடாது என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பையும், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
English Summary
If you negligent action taken action order issued minister do you know what