லாட்டரி குடும்பம் தமிழ்நாட்டை கவ்வ பார்க்கிறது!விஜய் சிக்கிவிடக் கூடாது! பழ.கருப்பையா வார்னிங்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சூழலில், “விஜய் தவறான மனிதர்களை நம்பக் கூடாது” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.கருப்பையா, “தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சி நடந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால் அந்த ஊழலை ஒழிக்க மக்களோ அரசியல் கட்சிகளோ தயாராக இல்லை. இந்த முறை மக்கள் தாங்களாகவே மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்றார் என்பதை விட, மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் விரும்பிய ஆட்சியை அமைக்க விஜய்யை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார்கள். நான்கூட விஜய் வெல்வார் என்று நினைக்கவில்லை. விஜய்யே நம்பியிருந்தாரா என்று தெரியாது. மக்கள் வேட்பாளர்களைப் பார்க்கவில்லை. பணத்தின் சக்தியை தோற்கடித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

“சாதி, மதம் பார்க்காமல் முகம் தெரியாத வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். இது உயரிய ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை காட்டுகிறது. இலவச அரசியலை மக்கள் வெறுத்துள்ளனர். ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று விஜய் சொன்ன வார்த்தையே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது” என்றும் பழ.கருப்பையா கூறினார்.

அதே நேரத்தில், அதிமுக முன்னாள் தலைவர்கள் தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். “விஜய்யால் தவறான மனிதர்களை வைத்து கொண்டு சரியான செயல்களை செய்ய முடியாது. விஜய் பலியாகிவிடுவாரோ என்று நான் அஞ்சுகிறேன். சி.வி. சண்முகம் வீட்டிற்கு விஜய் சென்றதும், அங்கிருந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதும் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளது” என்றார்.

மேலும், “விஜய் வந்துவிட்டதால் நமக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தவறான மனிதர்களை தேடி சென்றால், ஆட்சியின் நோக்கமே தவறாகிவிடும்” என்றும் எச்சரித்தார்.

லீமா ரோஸ் குறித்து பேசுகையில், “லீமா ரோஸ் அமைச்சராகப் போவதாக பேசப்படுகிறது. லாட்டரி குடும்பம் தமிழ்நாடு அரசியலை கவ்விக் கொள்ள இடம் கொடுக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து விமர்சித்த அவர், “அதிமுகவில் பலர் மீது வழக்குகள் இருக்கின்றன. ஊழல் செய்தவர்களை ஆட்சியில் சேர்த்தால், அவர்கள் ஆட்சியின் நோக்கத்தையே தோற்கடித்துவிடுவார்கள்” என்றார்.

இறுதியாக, “திமுக கூட்டணி கட்சிகள் விஜய் பலவீனமடையும் வரை ஆட்சி நீடிக்கட்டும் என்பதையே நினைக்கின்றன. ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தருபவர்களால் பெரிய ஆபத்து இல்லை. ஊழல் செய்த அதிமுகவினர் ஆட்சியில் பங்கு பெறுவதுதான் மிகப்பெரிய சிக்கல். நல்ல காரியங்களை விஜய் விரைவாக செய்ய வேண்டும். அதுவே என் கனவு” என்று பழ.கருப்பையா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The lottery family is trying to take over Tamil Nadu Vijay should not get caught pazha karuppaiyaa Warning


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->