“நெகட்டிவ் விமர்சனங்கள் படங்களை பாதிக்கிறது” – ப்ளூ சட்டை மாறனை அட்டாக் செய்த வனிதா விஜயகுமார்? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, திரைப்பட விமர்சகர்களை பற்றி அவர் பேசிய கருத்துகள், யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக குறிவைத்து கூறப்பட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண சர்ச்சைகள் மூலமாகவே அதிகம் பேசப்பட்டார். தற்போது சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஆண்டு அவர் இயக்கி நடித்த “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படம் வெளியாகியது. இதில் ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்திருந்தார். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. திரையரங்குகளில் தோல்வியடைந்ததுடன், எந்த ஓடிடி தளமும் வாங்க முன்வராததால் பின்னர் யூடியூபில் வெளியிடப்பட்டது. அங்கும் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் வனிதா கூறியதாவது:“யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் ஒரு படத்தை பற்றி தவறாக பேசலாம். நெகட்டிவ் விமர்சனம் செய்வதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், அதில் உழைத்தவர்களுக்கும் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் யோசிக்கவில்லை” என்றார்.

மேலும், “அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கூட தெரியவில்லை” என்று அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும், “அனைத்து படங்களையும் கடுமையாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறனைத்தான் வனிதா மறைமுகமாக தாக்கியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், சிலர் “திரைப்பட விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வாதிட, மற்றொருபுறம் “விமர்சனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்” என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

வனிதாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Negative reviews affect films Vanitha Vijayakumar who attacked Blue Shirt Maran


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->