'தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கொள்கை திட்டமோ, முயற்சியோ இல்லை'; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..! - Seithipunal
Seithipunal


விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கொள்கை திட்டமோ, முயற்சியோ இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொது இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை கருதி, அரசியல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் குறுக்கீடுகள் ஏற்படாமல் இருக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதிய அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு தமிழ் மாநிலக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சூழலில் அரசின் செயல்பாட்டின் மீதான அணுகுமுறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் திமுக, மதச்சார்பற்ற கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நலத் திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளார். புதிய ஆட்சியிலும் அத்தகைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். புதிய திட்டங்களையும் வரவேற்போம் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை புதிய அரசு செவிமடுத்து நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் கொள்கை திட்டமோ, முயற்சியோ இல்லை என்றும், குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியிருந்தாலும், அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குதிரை பேரம் தொடர்பாக வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டால், சட்டம் தனது கடமையை செய்யட்டும் என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Communist Party of India states that there is no policy plan or initiative included in the Tamil Nadu Cabinet


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->