ஈடன் கார்டனில் இலக்கை எட்டமுடியாமல் திணறிய குஜராத் அணி; அபார வெற்றிபெற்ற கொல்கத்தா..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் போட்டியில் 60 வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது.

அணியின் சார்பில் பின் ஆலன், 93, அங்கிரிஷ் ரகுவன்ஷி 82, கேமரோன் கிறீன் 52 என அதிரடி காட்டினர். குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக சாய் சுதர்சன் அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் போது அவருக்கு கையில் பந்து அடிபட்டத்தில் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார். அணியின் கேப்டன் கில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 57 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த சாய் சுதர்சன் 53 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் குஜராத் அணி, 04 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை மாத்திரம் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில், தூபே, கேமரோன் கிறீன் தலா 01 விக்கெட்டினையும், சுனில் நரேன் 02 விக்கெட்டினையும் வீழ்த்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kolkata defeats Gujarat to secure victory


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->