எது ராஜதந்திரம்...? எது சாய்மானம் இல்லாத கொள்கை...? - இந்திய வெளியுறவுக் கொள்கையை சாடிய ப.சிதம்பரம் - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தள பதிவில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானை கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த தாக்குதல்களில் சுமார் 1300 ஈரான் மக்கள் உயிரிழந்ததுடன், 168 குழந்தைகள் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மனித இழப்புகளை கண்டிக்கும் ஒரு சொல் கூட இந்தியா பேசவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ரஷ்யா மற்றும் சீனா ஆதரவு வழங்காமல் விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியில், “இதில் எது விவேகம்? எது உண்மையான ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What constitutes diplomacy What constitutes principled stance P Chidambaram slams India foreign policy


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->