சாலை அமைக்கும் பணிகள்..MLA அனிபால் கென்னடி ஆய்வு!  - Seithipunal
Seithipunal


புஸ்ஸி வீதியில் மழைக்கால தடைகளை முறியடிக்க சாலை அமைக்கும் பணிகள் எம்.எல்.ஏ அனிபால் கென்னடி முன்னெடுபால் தீவிரம் காட்டிவருகிறார்.

புதுச்சேரி: மழைக்காலங்களில் புஸ்ஸி வீதியில் தண்ணீர் தேங்கி நிற்பது காரணமாக, அப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களுக்கு சுகாதார சிக்கல்கள் மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், மழை நாட்களில் நேரடியாக களத்தில் இறங்கி அதிகாரிகளை வைத்து போர்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கும் வகையில், புஸ்ஸி வீதி முதல் சுப்பையா சாலை வரை மற்றும் நகரப்பகுதிக்குட்பட்ட முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுப்பையா சாலை, மகாத்மா காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

தற்போது, அண்ணா சாலையில் இருந்து மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவருடன், பொது பணி துறையின் இளநிலை பொறியாளர் சிவபிரகாசம், ராமன், தொகுதி துணை செயலாளர் நிசார், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் இணைந்து இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Road construction works MLA Anibal KennedIs inspection


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->