உதகை சுள்ளிக்கூடு அருகே  சாகசப் பூங்கா..அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன் தகவல்!  - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில்  20-வது ரோஜா காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

இவ்விழாவில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் , அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், அரசு தலைமைக் கொறடா அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு கோடை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

கோடைவிழாவின் ஒரு பகுதியாக இந்த ரோஜா காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு மலர் காட்சியை பெருமைப்படுத்தும் விதமாக 1995-ஆம் ஆண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் அமைக்கப்பட்ட அரசு ரோஜா பூங்கா தற்போது உலக பிரசித்திப்பெற்ற அரசு ரோஜா பூங்காவாக உருவெடுத்துள்ளது. துவக்க காலத்தில் 1919 ரோஜா வகைகளுடன் சுமார் 17,256 ரோஜா செடிகள் மட்டுமே நடவு செய்யப்பட்டன. தற்பொழுது தோட்டக்கலை துறையின் சீரிய முயற்சியின் மூலம் பல புதிய இரகங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு, இன்றைய தேதியில் 4,301 வகைகளை உள்ளடக்கிய 32,000 ரோஜா செடிகள் பூத்து குலுங்குகின்றன. இதில் அரிய வகையான பச்சை வண்ண ரோஜா வகையும் அடங்கும்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட அரசு ரோஜா பூங்காவிற்கு உலகின் தலைசிறந்த பூங்கா (Garden of Excellence) என்ற சான்றினை 2006-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள உலக ரோஜா சம்மேளனம் வழங்கி கௌரவித்தது. இப்பூங்காவினை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 7.25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளனர். 20-வது ரோஜா காட்சியானது கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இக்காட்சியின் சிறப்பம்சமாக 22 அடி உயரத்தில் 80,000 ரோஜா மலர்களால் 2 டால்பின் மீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, மற்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான ஆலிவ் ரிட்லி, ஆமை, பென்குயின், கடற்பசு, கடற்குதிரை, நட்சத்திர மீன் ஆகியவையும் குழந்தைகளை கவரும் வண்ணம் கடற்கன்னி, க்ளொவ்ன் மீன், கடற்சிற்பி போன்ற உயிரினங்களும் சுமார் 1,20,000 பல்வேறு வண்ண ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ரோஜா காட்சிக்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வண்ணம் மற்ற மாவட்டங்களிலிருந்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 20-வது உதகை ரோஜா காட்சியில் ரோஜா மலர்களால் அமைக்கபட்டுள்ள அனைத்து உருவ வடிவமைப்புகளையும் பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண ரோஜாக்களையும் கண்டு ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில், ஜீன் பூங்கா மேம்பாடு, உதகை வட்டத்தில், உதகை ஏரியை சுற்றி நடைபாதை சீரமைப்பு பணிகள், ரூ.3 கோடி செலவில் கோடப்பமந்து கால்வாய் சீரமைப்பு பணிகள், ரூ.3 கோடி செலவில் பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணிகள், குன்னூர் வட்டத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங், பேருந்து நிலைய விரிவாக்க பணிகள், கோத்தகிரி வட்டத்தில், கண்ணேரிமுக்கு பகுதியில் புதிய தோட்டக்கலை பூங்கா, சுள்ளிக்கூடு அருகில் சாகசப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசு தலைமைக் கொறடா அவர்கள் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு தலைமைக் கொறடா அவர்கள், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள், உதகை ரோஜா பூங்காவில் நடைபெற்ற விநாயகா நாட்டிய கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.எஸ்.நிஷா , அவர்கள், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, துணை இயக்குநர்கள்  அப்ரோஸ்பேகம், நவனீதா, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், உதகை நகரமன்றத்தலைவர் வாணீஷ்வரி, உதவி இயக்குநர்கள் பைசல் (உதகை ரோஜா பூங்கா), அனிதா (மண்ணாய்வுக் கூடம்), பெவிதா (அரசு தாவரவியல் பூங்கா), ஜெயந்தி (நடவுப் பொருள்), விஜயலட்சமி (குன்னூர்), தோட்டக்கலைத்துறை அலுவலர் பிரியா (ரோஜா பூங்கா), உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், உதகை நகரமன்ற உறுப்பினர் (17வது வார்டு) ரஜினிகாந்த், ரோஜா சங்க உறுப்பினர் கிருஷ்ணகுமார் உட்பட அரசுத்துறை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adventure park near Udhagai Sullikood information from the government head Korada Ramachandran


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->