'வழியிறேன்' second single song ப்ரோமோ வெளியிட்ட மதராஸி படக்குழு
Madrasi film crew releases Vaiyadeem second single song promo
தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் ''ஏ.ஆர். முருகதாஸ்'' தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் 'மதராஸி'. இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார்.மேலும் பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர்விக்ராந்த், வித்யூத் ஜம்வல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இசை வெளியீட்டுவிழா மற்றும் டிரெய்லரை வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட இருக்கிறது.இதனிடையே,படத்தின் செகண்ட் சிங்கிளான ''வழியிறேன்'' பாடலின் ப்ரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்பாடலின் வரிகளை இயக்குனர் 'விக்னேஷ் சிவன்' எழுத அனிருத் பாடியுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
Madrasi film crew releases Vaiyadeem second single song promo