என்னால் அதை செய்யமுடியல.. பதவியை தூக்கி எறிந்த  அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க முடியாததால் நெதர்லாந்து அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியைப தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து  வருகிறது. இதில் காசாவில்  62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் காசாவின் முக்கிய நகரான காசாசிட்டியை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் காசா சிட்டி முழுவதையும் கைப்பற்ற திட்டமிட்டு தரைவழி தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.   

இந்தநிலையில் காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.

இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I cannot do that the minister who threw away the position


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->