விஜயை மட்டும் ஏன் டார்கெட் பண்றாங்க? ’அங்கிள்’ ஒன்னும் ஆபாச வார்த்தை இல்லையே! விஜய் ஆதரவாக களமிறங்கிய கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக அரசியல் நிலைமைகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்தார்.

அவர் பேசியதாவது:“ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் எங்கள் கட்சியின் 7ஆம் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அங்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.”

கவின் கொலை மற்றும் ஆணவக்கொலைகள்:
“திருச்சியில் கவின் கொலைக்கு எதிராக எங்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆணவக் கொலைகளை தடுக்க அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி பாடத்திட்டத்திலேயே இத்தகைய விழிப்புணர்வு பாடங்களை சேர்க்க வேண்டும்.”

விஜயின் அரசியல்:
“விஜய் மாநாட்டை நன்றாக நடத்தி இருக்கிறார். அவர் கூறிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை தவறாக எடுத்து கூறப்பட வேண்டாம். ஆட்சியில் பங்குபற்றி தொடர்ந்து பேசிவரும் அவர், அடுத்த தேர்தலில் மாற்றத்தை உருவாக்குவாரா என்பதை காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரைபிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, விஜயை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக கூட்டணி நிலை:
“எங்கள் கட்சி தவெக கூட்டணியில் இணைவதா என்பது மாநாட்டுக்கு பின்பே தீர்மானிக்கப்படும். அதிமுக கூட்டணியில் உள்ளீர்களா எனக் கேட்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணி முதலில் இருக்கிறதா என்பது தான் கேள்வி.”

தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகள்:
“சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அரசு நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும். மழை காரணமாக தூய்மை பணியாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து அரசு மற்றும் மாநகராட்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

100 நாள் வேலை வாய்ப்பு முறைகேடு:
“100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்களில் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதனை அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

புதிய சட்டம்:
“நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள – பிரதமர், முதலமைச்சர் 30 நாளுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவியில் இருந்து நீக்கக் கூடிய சட்டத்தை எங்கள் கட்சி வரவேற்கிறது.”இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why are they targeting only Vijay Uncle is not an obscene word Krishnasamy comes out in support of Vijay


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->