சித்திரை திருவிழாவை காண சென்ற பெண்ணிடம் 31 பவுன் நகை பறிப்பு! - Seithipunal
Seithipunal


சித்திரை திருவிழாவை காண சென்ற பெண்ணிடம் 31 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த தம்பதி வேலுச்சாமி,ராதா, இவர்கள் வைகை ஆற்றில் நடைபெறும் சித்திரை திருவிழா காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர். பின்னர் சித்திரை திருவிழாவில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

அப்போது வரும் வழியில் அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கியபோதில் ராதாவின்  கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகை திடீரென்று மயமானது .கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக நகையை பறித்துக் கொண்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A woman who went to see the Chithirai festival was robbed of 31 pounds of jewelry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->