டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
Winter Session of Parliament 1st December 2025
மத்திய அரசு அறிவித்துள்ளதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்:
“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 1 முதல் 19 வரை நடத்த மத்திய அரசு முன்மொழிந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆக்கபூர்வமான கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்,” என்று கூறியுள்ளார்.
இக்கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பொருளாதாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய சட்ட மசோதாக்கள் வர வாய்ப்புள்ளது.
அதேசமயம், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த விவகாரத்தையும் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Winter Session of Parliament 1st December 2025