புதுச்சேரியில் இன்று 102.6 டிகிரி வெயில் பதிவு!
Today a temperature of 102.6 degrees has been recorded in Puducherry
புதுச்சேரியில்அதிகபட்சமாக 102.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இது நடப்பு கோடை சீசனில் பதிவான அதிகபட்ச வெயில் ஆகும்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தமிழகம் ,புதுவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது . இந்தநிலையில் புதுச்சேரியில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கிய நிலையில் அன்றைய தினம் அதிகபட்சமாக 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்நிலையில் இன்று (12.5.2025) அதிகபட்சமாக 102.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இது நடப்பு கோடை சீசனில் பதிவான அதிகபட்ச வெயில் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும், இடி, மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Today a temperature of 102.6 degrees has been recorded in Puducherry