ஜூனியர் என்டிஆர் படத்தில் புது அதிர்ச்சி! -காந்தாரா நட்சத்திரம் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?
New shock in Jr NTRs film Is Kannada star playing guest role
பிரபாஸுடன் இணைந்து இயக்கிய ‘சலார்’ பிளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு, பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்த்து உருவாக்கி வரும் ‘என்டிஆர்நீல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் படத்தில், அண்மையில் வெளியாகிய ‘காந்தாரா 2’ படத்தின் நட்சத்திரமாக திகழ்ந்த ருக்மிணி வசந்த் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கிளப்பியுள்ளது.

இதோடு, இன்னொரு அதிரடி தகவலும் கசிந்துள்ளது. ‘காந்தாரா’ படத்தின் இயக்குனரும், நாயகனுமான 'ரிஷப் ஷெட்டி' கூட இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் (கெஸ்ட் ரோல்) தோன்றக்கூடும் என்ற பேச்சு பரவி வருகிறது.
மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையிலும், இந்த செய்தி ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி,ரவி பஸ்ரூர் இசையமைக்கும் இந்த பிரமாண்ட படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த சினிமா விருந்து, அடுத்த ஆண்டு ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
English Summary
New shock in Jr NTRs film Is Kannada star playing guest role