காதலனுக்காக 600கி.மீ தாண்டி வந்த காதலி... ஆனால் அடுத்து நடந்த twist தான் மோசம்...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் ஜின்ஜின்னுவைச் சேர்ந்த 37 வயதான 'முகேஷ் குமாரி' என்பவர், அங்கன்வாடி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். கணவரை விவாகரத்து செய்த பின் தனிமையாக வாழ்ந்து வந்த அவர், இணையத்தில் புதிய வாழ்க்கைத் துணையை எதிர்பார்த்தார்.இந்நிலையில் பர்மாரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராமுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு, அது விரைவில் ஆழமான உறவாக மாறியது.

இருவரும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகளில் மூழ்கியபோது, மனாராம் திருமணம் செய்வதாக முகேஷிடம் உறுதியளித்தார். இதனால், நம்பிக்கையுடன், முகேஷ் அவரை சந்தித்து உல்லாசமாகவும் இருந்தார்.ஆனால், காலம் கடந்தும் திருமண வாக்குறுதி நிறைவேறவில்லை. இதுகுறித்து மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபோதும், மனாராம் பல்வேறு காரணங்களைச் சொல்லி தவிர்த்து வந்தார்.

இதனால் மனமுடைந்த முகேஷ், கடந்த வாரம் தனது காரை ஓட்டி 600 கி.மீ தொலைவில் இருக்கும் காதலனின் வீட்டுக்கே நேராக சென்றார். அவர்களுடைய உறவை மனாராமின் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக எடுத்துரைத்தார்.இதில் கடும் கோபமடைந்த மனாராம், முகேஷை காரில் புறநகர் பகுதியில் அழைத்துச் சென்று, திடீரென காரில் இருந்த இரும்புக் கம்பியைப் பிடித்து அவரது தலையில் பலத்த அடிகளை கொடுத்தார்.

அங்கு குருதியால் மூழ்கிய முகேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அதன்பின், கொடூரத்தை மறைக்க மனாராம், உடலை அருகிலுள்ள முள்புதரில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.சில நேரங்களில் அப்பகுதியை கடந்து சென்ற மக்கள், பெண்ணின் சடலம் கண்டதும் காவலுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த காவலர்கள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை தொடங்கினர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சேகரித்தபோது, கொலையாளி மனாராமின் அடையாளம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனடியாக காவலர்கள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girlfriend who traveled 600 km her boyfriend but next twist worst


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->