134 க்கு சுருண்ட சூரியன்.! சென்னை சிங்கங்கள் அசத்தல் பந்து வீச்சு.!
ipl 2021 csk vs srh 1st half
ஐ.பி.எல். தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் ஆட்டம் தொடங்கியுள்ளது. ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேசன் ராய் 7 பந்துகளை சந்தித்து 2 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹா நிதானமாக 46 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

அணியின் கேப்டன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்த 11 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கார்க் 10 பந்துகளை சந்தித்து 7 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் எடுத்தது. சென்னை பந்து வீச்சை பொருத்தவரை ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், தாக்கூர், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
.
English Summary
ipl 2021 csk vs srh 1st half