தனது தொகுதி கோவிகளுக்கு சொந்த நிதியை வழங்கிய கல்யாணசுந்தரம்,MLA !
Kalyanasundaram MLAwho provided his own funds to his constituency temples
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைசாவடி கிராமத்தில் உள்ள இரண்டு கோவில்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தனது சொந்த நிதியை கல்யாணசுந்தரம்,MLA வழங்கினார்.
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைசாவடி மீனவ கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கைஅம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 7.7.2025 திங்கட்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எம்.எல் கல்யாணசுந்தரம்,MLA அவர்களின் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய திருப்பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து முன்னதாகவே ரூபாய் 1 லட்சம் ரொக்கமாகவும் மற்றும் இன்று ரூபாய் 5 லட்சம் ரொக்கமாகவும் மொத்தம் ரூபாய் 6 லட்சம் மற்றும் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் உள்ள வேஷ்டி சேலைகள் நன்கொடை வழங்கினார்
இதேபோல புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைசாவடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம் திருப்பணிக்கு மாண்புமிகு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எம்.எல் கல்யாணசுந்தரம் அவர்களின் தனது சொந்த நிதியிலிருந்து முன்னதாகவே ரூபாய் 1.50 லட்சம் வழங்கியதைத் தொடர்ந்து மேலும் இன்று ரூபாய் 5 லட்சம் ரொக்கமாகவும் ஆக மொத்தம் 6.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.
English Summary
Kalyanasundaram MLAwho provided his own funds to his constituency temples