டென்னிஸில் இந்தியாவுக்கு கிடைத்தது தங்கம்! தோல்வியின் பிடியில் வெகுண்டெழுந்த ரோஹன் போபண்ணா இணை அபாரம்!  - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய டென்னிஸ் ஜோடி தங்க பதக்கத்தின் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த ஒன்பதாவது தங்கப்பதக்கம் ஆகும். 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ரோகன் போபண்ணா - ருதுஜா போஸ்லே ஜோடி இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி தங்க பதக்கத்தினை தன் வசப்படுத்தி இருக்கிறது. சீன தைபே இணைக்கு எதிராக விளையாடிய இந்திய இணையானது, 2 - 6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், இரண்டாவது செட்டை 6 - 3 என்று கணக்கில் கைப்பற்றி, டைப்ரைக்கரில் பத்துக்கு நான்கு என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது. 

43 வயதான ரோகன் போபண்ணாவிற்கு கலப்பு இரட்டையர் பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டியில் இது முதல் தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ராமநாதன் இணை வெள்ளி பதக்கத்தை வென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian tennis mixed pair won gold in asian games 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->