ஒரே அடியாக ஜம்ப் செய்த ரோஹித், ஏற்றம் கண்ட அஸ்வின்!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக உள்ளார். கடந்த 2019 முதலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். அதுமுதல் அசத்தி வருகிறார். 

இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 66 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 20 புள்ளிகள் பெற்று 742 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இது அவரின் அதிகபட்ச ரேங்க் ஆகும். அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் போது 54 ஆவது இடத்தில இருந்தார். 

11 விக்கெட் வீழ்த்தி அக்சார் பட்டேல் 30 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார். அதே போட்டியில் அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். இதனால் பந்துவீச்சாளர் பட்டியலில்  3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே ஸ்பின் பவுலர் அஸ்வின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Test rankings


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal