அகமதாபாத் டெஸ்ட்! நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியானது சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் ஆனது அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3வது டெஸ்ட் போட்டி ஆனது பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் விளையாட இருக்கிறது. 

சென்னையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய இந்திய அணி, அகமதாபாத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே கொண்டு களமிறங்கும் என தெரிகிறது. பிங்க் நிற பந்து மற்றும் பகலிரவு ஆட்டம் என்பதால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற கணக்கில் இந்திய அணி களம் இறங்கும் என்று தெரிகிறது.

அதேபோல அடிவாங்கிய இங்கிலாந்து அணி மீண்டும் பலமான வீரர்களை களமிறக்கும் என்பதால், இந்திய அணியை தனது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அடுத்து போட்டிக்கான அணி தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வரும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் குல்தீப் யாதவ் இடத்தில் விளையாடுவார் எனவும் தெரிகிறது. அக்ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் அவர்கள் தொடர்வார்கள் என தெரிகிறது. 

ஹர்டிக் பண்டியா விளையாடுவதை உறுதி செய்யும் விதமாக, நெட் பயிற்சி மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளவில்லை எனவும், தேவைப்பட்டால் பந்து வீசலாம் எனவும் தெரிகிறது. அவர் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரின் வருகையின் மூலம் இந்திய பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya will play in pink ball test at Ahmadabad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal