தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து! போராட்டமே இல்லாமல் சரண்டர் ஆன வெஸ்ட் இண்டீஸ்! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் விளையாட்டு உலகமே முடங்கிய நிலையில், கொரோனவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வரவழைத்து ஒத்திவைக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது. 

கொரோன பரவலை தடுக்கும் விதமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனில் இருந்த நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து நிதானமாக விளையாடி 369 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் 197 ரன்களுக்கு சுருண்டது. ஸ்டுவர்ட் பிராட் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

398 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சரண்டர் ஆனார்கள். வோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் 2-1 என்ற ஆட்டக்கணக்கில் தொடரைக் கைப்பற்றி கொரோனோ கால டெஸ்ட் கோப்பையை வசப்படுத்தியது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பிராட் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர்களுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England won test series against west indies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->