147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி படைத்த மிரட்டல் சாதனை! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாக் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க, பென் டக்கெட் ஒரு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.  

பென் டக்கெட் -ஆலி போப் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்கள் அடித்தார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டி ஆடிய இருவராலும், இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து ஒரு வரலாற்று சாதனையை புரிந்துள்ளது.

147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய ஆலி போப் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போதுவரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 300 ரன்களை சேர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England West Indies Test series Ben Duckett 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->