கொரோனாவுக்கு பிறகான முதல் போட்டி! சீட் நுனியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள்! அனல் பறக்கும் ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தும் நிலையில், ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும்  முடங்கிப் போனது. இந்த நிலையில் அதனை எல்லாம் தாண்டி நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி என்ற பெருமையை தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி பெறுகிறது. 

இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் கடும் சவாலை அளிக்க 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி 318 ரன்கள் குவித்து 114 ரன்கள் லீடாக பெற்றது.  அடுத்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நிதானமுடன் விளையாடி 313 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் இலக்கு என்ற இலக்கை நிர்ணயித்தது. இறுதி நாளான இன்று போட்டி எப்படியும் முடியும் என்ற நிலை இருக்கிறது. சற்று முன்பு வரை 200 ரன்களை நோக்கி ஆடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி 41 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 128 ரன்களை எடுத்துள்ளது அந்த அணியின் பிளாக்வூட் 52 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் அசத்திய டவுரிச் அவருடன் தற்போது விளையாடி வருகிறார். 

தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கையே ஓங்கி நிற்கிறது. தொடக்க ஆட்டக்காரர் கேம்பல், ஜோப்ரா ஆர்ச்சர்  பந்துவீச்சில் அடிபட்டு ரிட்டயர்ஹட்  முறையில் வெளியேறி உள்ளார். தேவைப்படும் பட்சத்தில் திரும்ப வருவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில்  ஜோப்ரா ஆர்ச்சர் அட்டகாசமாக பந்துவீசி  வருகிறார். இதுவரை விழுந்த 4 விக்கெட்டுகளில்  மூன்று விக்கெட் டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். கொரோனாவிற்கு பிறகு தொடங்கிய முதல் போட்டியே சுவாரஸ்யமான போட்டியாக அமைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England West indies First test


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->