உலக கோப்பையை வெல்லப்போவது யார்? எந்த அணிக்கு அந்த தகுதி?! - Seithipunal
Seithipunal


வருகின்ற அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த உலகக் கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? அரை இறுதி சுற்றுக்கு முன்னேற கூடிய தகுதி உள்ள அணிகள் எவை? என்பது குறித்து, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள், முன்னாள் வீரர்கள், முன்னாள் கேப்டன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கன், இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், இந்த உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிச்சயமாக இடம் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அதே போல இந்தியாவும் இறுதி ஆட்டத்தில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அரை இறுதி   ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

அந்த அணிகளும் கோப்பையை வெல்வதற்கு உண்டான திறமையான அணிகளாக தற்போது திகழ்ந்து வருகின்றன.

எனவே, இந்த உலகக்கோப்பை தொடர் கடுமையான போட்டி நிறைந்த ஒரு தொடராக அமையும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் உலகக் கோப்பை வெல்வதற்கு வலுவான அணியாக உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வலுவான ஒரு போட்டியை கொடுக்கும், சவாலை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று இயான் மோர்கன் தனது ககணிப்பினை பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

england Eoin morgan World Cup 2023 semi and final


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->