இங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்!  - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் உலகம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, கிரிக்கெட் போட்டியை தொடங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 8 ம் தேதி சௌத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் அவருக்கு முதல் போட்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்த போட்டியை எதிர்பார்த்து விளையாட்டு உலகமே காத்திருக்கிறது. ஆனால் இந்த போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விவரம் : பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ஆண்டர்சன், ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், பட்லர், ராரி பேர்ன்ஸ், ஸாக் கிராவ்லி, ஜோ டென்லி, போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ben Stokes appointed as captain of England test team with absence of joe root


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->