13 வருடங்களுக்கு பின் மீண்டும்பாகிஸ்தான்- வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை; இந்திய வான்பரப்பு வழியாகப் பறக்குமா..?
Direct flight service between Pakistan and Bangladesh resumes after 13 years
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 29-ந்தேதியில் இருந்து விமான சேவை தொடங்கவுள்ளது.
முன்னதாக துபாய் அல்லது தோஹாக வழியாக விமானங்கள் இயக்கப்பட்டது. டாக்கா- கராச்சி இடையில் 2370 கி.மீ, தூரம் ஆகும். குறித்த விமான சேவை இந்திய வான்வழியாக இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், அதற்கு வங்கதேச அரசு , வங்கதேசம் ஏர்லைன்ஸ் இந்தியாவிடம் இன்னும் அனுமதி வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான சேவை வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அறப்போதிலிருந்து இந்தியா- வங்கதேசம் உறவில் விரிசல் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக, டிப்ளோமேட்டிக், வர்த்தகம் மக்களுக்கு இடையிலான தொடர்பை கட்டமைப்பு பேச்சுவாத்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது துபாய் அல்லது தோஹாக வழியாக செல்ல 08 மணி நேரம் முதல் 12 மணி நேரமும், சில விமான நிறுவன விமானங்கள் 18 மணி முதல் 22 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் நேரமும் ஆகிறது. ஆனால், தற்போது நேரடி சேவை மூலம் இந்த நேரம் மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Direct flight service between Pakistan and Bangladesh resumes after 13 years