பெண்கள், பொதுமக்களை வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவு.. தலையில் தட்டி கூட்டி சென்ற காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இளம்பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரம்பை மீறி செயல்பட்ட நாட்டிய புயல் டிக் டாக் போராளி இளைஞரை கைது செய்ய அதிகளவு கோரிக்கை எழுந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் இளைஞரின் பெயர் கண்ணன். இவர் தன்னகத்தே பல திறமைகளை ஒளித்துவைத்து கொண்டு, வெளிக்கொணர இயலாமல் திணறி வந்துள்ளார். 

இதனையடுத்து இவருக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக கேடுகெட்ட டிக் டாக் சாவகாசம் கிடைக்கவே, இதில் பல விடீயோக்களை பார்த்து தானும் வீடியோ செய்து பதிவிடலாம் என்ற ஆர்வம் வந்துள்ளது. இதன்பின்னர் தனது திறமையை வெளிப்படுத்துவதாக நினைத்து பேருந்து நிலையம், சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீடீரென மக்களை பதறவைத்து நாடியமடி வந்துள்ளான். இதனால் பல போக்குவரத்து ஸ்தம்பிப்பு, பொதுமக்கள் இடையூறு, பெண்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பவே மக்கள் கொந்தளித்துள்ளனர். 

அவரது நடவடிக்கைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இவனை காவல் துறையினர் கைது செய்து எச்சரித்து அனுப்பி வைத்த நிலையில், இதே போன்ற ஒரு டிக் டாக் மனநல நோயாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகேயுள்ள சேர்ந்தமரம் பகுதியை சார்ந்தவர் கண்ணன் (வயது 23). இவர் சாலைகளில் செல்லும் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் போன்றறையும், பொதுமக்களையும் அலைபேசியில் பதிவு செய்து டிக் டாக் செயலியில் பதிவு செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வரவே, இதனை கவனித்த காவல் துறையினர் டிக் டாக் நோயாளி கண்ணை கவனிப்பதற்காக கைது செய்துள்ளனர். மேலும், இவன் பதிவு செய்த வீடியோ காட்சிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் அத்துமீறிய வீடியோ காட்சிகள் இவனது கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in tenkasi youngster arrest due to public nuisance tic tok video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->