மனைவி பிரிந்த நேரத்தில் கணவன் செய்த செயல்.! அரங்கேறிய துயரம்.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் ஒக்கநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்த முத்து(45) என்பவர் ஒரு விவசாயி. முத்துவிடம் இருந்து அவருடைய மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்றுள்ளார். முத்து இதன் காரணமாக தனியாக வசித்து வந்தார். 

நேற்று முன்தினம் முத்துவின் மனைவி பிரிந்து சென்றதனால் அவர் மிகவும் மனம் உடைந்துள்ளார். எனவே, மிகுந்த சோகத்தில் இருந்த முத்து அவரது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கியுள்ளார். 

husband and wife fight, seithipunal

முத்து மயங்கி கிடந்த காட்சியை கண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் முத்துவை உடனடியாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அதன் பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக முத்து அனுமதிக்கப்பட்டார். நேற்று இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முத்துவின் உறவினரான பால்ராஜ் உடையார்பாளையம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in ariyalur


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal