ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வேலைகள் நிறைவு; முக்கிய காட்சிகளுக்கு மியூட்; தேர்தல் முடிந்து ரிலீஸ்..! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் கடைசியாக நடித்து இன்னும் வெளிவராமல் இருக்கும் படம் 'ஜனநாயகன்'. இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் தொடர்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மிதா பைஜூ, பாபி தேவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களும் டிரைலரும் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மறு தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் வெளியீடு தொடர்ந்து தாமதமாகியுள்ளது.  இதற்கிடையே படக்குழுவினர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் தற்போது சென்சார் போர்டு மீண்டும் படத்தை தணிக்கை செய்து வருகிறது.

தற்போது அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துள்ளதாகவும், படம் தேர்தல் முடிந்த ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் படத்தை பார்த்துள்ள தணிக்கை வாரிய அதிகாரிகள் அரசியல் தொடர்பான சில சர்ச்சைக்குரிய காட்சிகளை மியூட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் அரசியல் ரீதியான படம் என்பதால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் அவசியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகுவதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Key Scenes in the Film Jananayagan' Muted


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->