பூங்காவில் 40 பறவைகள் பலி...! - மறு அறிவிப்பு வரும் வரை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்...!
40 Birds Die Park Guindy Children Park Closed Until Further Notice
கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள சில பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமான இங்கு வார இறுதி நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை வருகை தருவது வழக்கம்.
சமீபத்தில் அடையார் பகுதியில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள் கூண்டில் இருந்த சில பறவைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வனத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வருகைக்காகப் பூங்கா மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
40 Birds Die Park Guindy Children Park Closed Until Further Notice