துரந்தர் 2; தமிழ், தெலுங்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைச்சாச்சு'; ரிலீஸ் எப்போது..?
Durandhar 2 Receives Censor Certificates for Tamil and Telugu
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் 'துரந்தர்'. பாகிஸ்தானுக்கான ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், சுமார் ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 173 கோடி ரூபாய் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதித்த படங்கல் எல்லா வற்றையும் முறியடித்து, உலக அளவில் முதல் நாள் 247 கோடி வசூல் செய்து துரந்தர் 2 முதல் இடத்தில் உள்ளது.
இப்படத்தின் சிறப்புக்காட்சி மார்ச் 18-ஆம் தேதி மாலை மற்றும் இரவு ஆகிய இரு காட்சிகள் இந்தியா முழுக்க ஐந்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் இந்திப் பதிப்பே மார்ச் காலையிலும், இரண்டாம் பாதி மதியமும் தான் திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக பிற மொழிப் பதிப்புகள் எதுவுமே திரையரங்குகளுக்கு அனுப்பப்படவில்லை. அதற்கு அந்தந்த மொழிகளில் சென்சார் சொன்ன திருத்தங்களை உடனடியாகச் செய்து சான்றிதழ் பெற முடியாமல் போனது காரணம் எனச் கூறப்படுகிறது. எனவே, மார்ச் 18ஆம் தேதி சிறப்புக் காட்சிகள் இந்தியா முழுக்க இந்தியில் மட்டுமே திரை இடப்பட்டது. பிற மொழிக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திப் பதிப்பே திரையிடப்பட்டது. சில திரையரங்குகள் படத்தையே கேன்சல் செய்து, டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 'துரந்தர் 2' தமிழ் டப் பதிப்புக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் நாளை தமிழிலும், தெலுங்குப் பதிப்புக்கான சென்சார் சான்றிதழும் கிடைத்துள்ளதால் தெலுங்கிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த படம் எப்போதிலிருந்து திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை.
மேலும் இப்போது வந்திருக்கும் படமும் 2K தரத்தில்தான் வந்துள்ளது. 4K தரத்திலான பதிப்பு அடுத்த வாரம்தான் வரும் எனச் கூறப்படுகிறது. இதனால் ஐமாக்ஸ் பதிப்புக்கான கன்டென்ட் இன்னும் வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் சீராகி அனைத்து மொழி மற்றும் தரத்தில் எப்போது ’துரந்தர்’ வெளியாகும் என்பது எதிர்ப்பாக உள்ளது.
English Summary
Durandhar 2 Receives Censor Certificates for Tamil and Telugu