உங்க தொண்டர்களால்தான் உங்களுக்கு கெட்ட பெயர் நீங்க எல்லாம் என்ன தலைவர்? நிவேதா பெத்துராஜ் விளாசல் - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், சமூகத்தில் நடைபெறும் முக்கிய விஷயங்கள் குறித்து அடிக்கடி தனது கருத்துகளை வெளிப்படுத்தும் நடிகையாகவும் அறியப்படுகிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த பதிவில்,“உங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டிருந்தால் அதைத் தடுக்க வேண்டியது தலைவரின் பொறுப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி நடந்துகொள்வது அந்தக் கட்சிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு யாரை குறிவைத்து எழுதப்பட்டது என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர், இந்த பதிவு திமுக ஐ.டி. விங்கை குறிவைத்து எழுதப்பட்டதாக கூறி வருகிறார்கள். இதற்கான ஆதாரமாக சில ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு புறம், பல நெட்டிசன்கள் இதற்கு மாறான கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களது கருத்துப்படி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதள அணிகள் இணையத்தில் கடுமையான விமர்சனங்களும் தாக்குதல்களும் செய்து வருவதாகவும், அதைத்தான் நிவேதா பெத்துராஜ் மறைமுகமாக விமர்சித்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இதனால், நிவேதா பெத்துராஜின் ஒரு பதிவு அரசியல் தளத்தில் பல்வேறு விளக்கங்களுடன் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இதற்கிடையில், நடிகை நிவேதா பெத்துராஜின் தனிப்பட்ட வாழ்க்கையும் சமீபத்தில் பேசுபொருளாக இருந்தது. துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ராஹிமுடன் காதலில் இருப்பதாக கடந்த ஆண்டு அவர் அறிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளங்களில் இருந்து அந்த தொழிலதிபரின் புகைப்படங்களை நீக்கியதோடு, அவரை அன்ஃபாலோ செய்ததும் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து நிவேதா பெத்துராஜ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What kind of leader are you Nivetha Pethuraj Vilasal because of your volunteers


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->