சைபர் ரவுடிக் கும்பல் இன்னும் எத்தனை பெண்களின் பாதுகாப்போடு விளையாடும்? திமுகவிற்கு அதிமுக கடும் கண்டனம்!
admk condemn to dmk and mk stalin DMKITwing
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "பெண்கள் பாதுகாப்பு குறித்து மேடைக்கு மேடை நாடகமாடும் விடியா அரசின் லட்சணம் இதோ சந்தி சிரிக்கிறது!
திராவிட கொள்கை பற்றாளராக அறியப்படும் எழுத்தாளர் மீனா கந்தசாமி அவர்களுக்கே, DMKITwing மற்றும் அமைச்சரின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களால் இணையவழியில் மிரட்டல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
பெண் பாதுகாப்பு குறித்து பேசிய ஒரு பெண் எழுத்தாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண பெண்களின் நிலை?
இதற்கு காரணமான தன் உதவியாளரை தட்டிக்கேட்க கூட அமைச்சருக்கு மனமில்லை.
அதற்கு பதிலாக அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டும் தொனியில் அழைப்புகளை விடுப்பது என்பது எந்த வகையில் நியாயம்?
தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வளர்த்து வரும் இந்த சைபர் ரவுடிக் கும்பல் இன்னும் எத்தனை பெண்களின் பாதுகாப்போடு விளையாடும்?
பெண்களின் குரலை அதிகாரத்தால் அடக்க நினைக்கும் திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
English Summary
admk condemn to dmk and mk stalin DMKITwing