மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸின் 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்; வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி; மம்தா பானர்ஜி அறிவிப்பு...!
West Bengal Trinamool Congress 10 Key Election Promises
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்கு வரு ஏப்ரல் மாதம் சட்ட பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் இந்த 05 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதில், 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில், இந்த முறை ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 02 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையாக தேர்தல் வேளைகளில் இறங்கியுள்ளன.
இதற்காக இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மம்தா பானர்ஜி, தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளார்.
அதில் முதற்கட்டமாக 10 தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார். அவை கீழ்வருமாறு:
'துவாரே சிகித்சா' என்ற பெயரில், வீட்டு வாசலிலேயே மருத்துவச் சேவை திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், ஆயிரக்கணக்கான பள்ளிகள் மின்னணு கற்றல் வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும்.
மாநில அரசு 07 முதல் 08 புதிய மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் புதிய நகராட்சிகளையும் உருவாக்கும்.
லட்சுமிர் பண்டார் திட்டத்தின்கீழ், ரூ.500 கூடுதல் தொகையுடன், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும்; பட்டியல் சாதி/பழங்குடியினப் பெண்களுக்கு இத்தொகை ரூ.1,700ஆக வழங்கப்படும்.
வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் பங்களார் யுபா-சாத்தி திட்டம் தொடரும்.
வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும். ஓர் உறுதியான வீடும், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும்.
பங்களார் சிக்ஷாயதன் திட்டத்தின்கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் முழுமையான உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படும்.
உலகத் தரம் வாய்ந்த தளவாடங்கள், துறைமுகங்கள், வர்த்தக உள்கட்டமைப்பு மூலம் மேற்கு வங்காளம் கிழக்கு இந்தியாவின் வர்த்தக நுழைவாயிலாக உருவெடுக்கும்.
தற்போதுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையற்ற முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இது, மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
English Summary
West Bengal Trinamool Congress 10 Key Election Promises