நீலகிரியில் தொடரும் யானை அட்டகாசம்...! - காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சோகம்...!
Elephant rampage continues Nilgiris Tragedy boy dies after being attacked by wild elephant
நீலகிரி மாவட்டம் புத்தூர்வயல் பகுதியை சேர்ந்த சாஜஹான் மகன் மிஸ்ஹாப் (14), பாக்கனா அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த அந்த சிறுவன், குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்ககின்றனர்.
சம்பவத்தன்று மிஸ்ஹாப், பாக்கனா பகுதிக்கு முடிவெட்டச் சென்று விட்டு, பின்னர் தனது வீட்டிற்கு தனியாக நடந்து திரும்பிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது புத்தூர்வயல் அருகே புதர்ப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை திடீரென சிறுவனை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய மிஸ்ஹாப், யானையின் தாக்குதலால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் தப்பிக்க போராடிய சிறுவன் அலறி கதறிய சத்தம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் அபயக்குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று, காட்டு யானையை விரட்டியடித்து மிஸ்ஹாபை மீட்டனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மிஸ்ஹாப் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் குடும்பத்தினரையும், பள்ளி நண்பர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த இந்த துயர சம்பவம், நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Elephant rampage continues Nilgiris Tragedy boy dies after being attacked by wild elephant