ஒன்றே மனித குலம்... அரபா பெருவெளி காட்டும் சகோதரத்துவ சின்னம் பக்ரீத்..! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெகிழ்ச்சி வாழ்த்து...!
Bakrid symbol brotherhood shown by vast expanse Arabian Sea MDMK General Secretary Vaiko wishes you happy birthday
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத் திருநாளான பக்ரீத், உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ஆன்மிக எழுச்சியுடனும், ஈகை உணர்வுடனும் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைநம்பிக்கையின் உச்சமாக விளங்கும் இந்நாளில், நபி இப்ராகீம் (அலை) அவர்கள், இறைவனின் கட்டளையை முழுமனதுடன் ஏற்று, தன்னுடைய ஒரே மகனான இஸ்மாயிலை கூட பலியிட முனைந்த தியாக வரலாறு மனிதகுலத்திற்கு அழியாத எடுத்துக்காட்டாக திகழ்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, இன்றளவும் உலக மக்களின் உள்ளங்களில் பக்தி உணர்வை விதைத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நிறம், மொழி, சாதி, இனம், தேசம் போன்ற எல்லைகளை மீறி, “ஒன்றே மனித குலம்” என்ற உயரிய சிந்தனையுடன் மக்கள் ஒன்றிணையும் ஆன்மிக நாளாக பக்ரீத் விளங்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபா பெருவெளியில் இலட்சக்கணக்கான மக்கள் இறை வழிபாட்டில் மூழ்கி, மனிதநேயத்தின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் காட்சி, சகோதரத்துவத்தின் சின்னமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல தலைமுறைகளாக மத நல்லிணக்கத்துடனும், உறவுப்பாசத்துடனும் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள், பக்ரீத் திருநாளை மற்ற சமய மக்களுடனும் பகிர்ந்து கொண்டாடுவது சமூக ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் உயரிய பண்பாடாக திகழ்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, அன்பு, ஈகை, சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்புகள் மேலும் வேரூன்றி வளர வேண்டும் என வாழ்த்தியுள்ள வைகோ, இஸ்லாமிய மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தனது இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bakrid symbol brotherhood shown by vast expanse Arabian Sea MDMK General Secretary Vaiko wishes you happy birthday