அதிக லாபம் தருவதாகக் கூறி கைவரிசை...! 'கிரீன் வேர்ல்டு பவுண்டேஷன்' மோசடி வழக்கில் 3 பேருக்கு சிறை மற்றும் அபராதம்...! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே 'கிரீன் வேர்ல்டு பவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்த பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோர் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.77 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம், குற்றம் சாட்டப்பட்ட மூன்று நிர்வாகிகளுக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், அவர்களுக்கு ரூ.13.96 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraudsters strike by promising high returns Prison sentences and fines three individuals Green World Foundation scam case


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->