கணவனை கொலை செய்வது எப்படி..? இணையத்தில் தேடிய மனைவி; கள்ளகாதலுடன் சேர்ந்து வாழ போட்ட திட்டம்; செல்போனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!
In Uttar Pradesh a wife frequently searched the internet for how to murder a husband
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷாவை சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை ஒன்றும் உள்ளனர். திருமணம் ஆனதிலிருந்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி சண்டையிட்டு அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடுவதும், பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளார்.
இதனால் மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து உண்மையைக் கண்டறிய மனைவியை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார்.
அதன்படி, ஒரு நாள் மனைவி கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அதைப் ரகசியமாக பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், சத்தமிடாமல் பதுங்கி சென்று மனைவியிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார்.
அந்த நேரத்தில் மறுமுனையில் செல்போனில் பேசிய நபர் இணைப்பை துண்டித்த்துள்ளார். இதனால் கோபமான ராஜ்குமார், பிறகு செல்போனை ஆய்வு செய்துள்ளார். அதில் ஏராளமான ஆபாசப் படங்கள் இருந்துள்ளன.
உடனடியாக மனைவியின் பேஸ்புக்கை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான கள்ளக்காதல் கொலைகள் குறித்த செய்திகள் இருப்பதைப் பார்த்து ராஜ்குமார் அதிர்ந்து போயுள்ளார்.
அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கணவன் சவுரப்பை துண்டு துண்டாக வெட்டி நீல நிற ட்ரம்மில் அடைத்து சிமெண்ட் கலவையை ஊற்றி செப்டிக் டேங்கில் போட்டு அடைத்த செய்தியை ராஜ்குமாரின் மனைவி அடிக்கடி பார்த்துள்ளார்.
இதனால் பயத்தில் உறைந்து போன கனவன், அது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி ஆம் அல்லது இல்லை என்று கூறாமல் தலையை ஒரு மாதிரியாக அசைத்துள்ளார். இதனால் கணவன் ராஜ்குமார் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.
அவர்களிடம் தயவு செய்து தங்களது திருமண உறவை முறித்துவி டுமாறும், தினசரி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன்னால் வாழ முடியாது என்றும் ஊர் பெரியவர்கள் முன்பு கணவன் கதறியுள்ளார். இதனைக்கேட்ட பஞ்சாயத்தார், அந்தப் பெண்ணிடம் இது குறித்து கேட்க, அவர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது காதலனுடன் செல்வதாகக் கூறியுள்ளார்.
இதனை எதிர்பார்த்த கணவன் இப்படியே மனைவியின் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டால் இந்நேரம் நீல நிற டிரம்மிற்குள் தானும் இருந்து இருக்கவேண்டும் என்று நினைத்து அந்த முடிவுக்கு சம்மதம் சொல்லி வீடு திரும்பியுள்ளார்.
English Summary
In Uttar Pradesh a wife frequently searched the internet for how to murder a husband