பட்டாசு விற்பனைக்கு தடை; மீறினால் கடும் நடவடிக்கை; தேர்தலை முன்னிட்டு அதிரடி உத்தரவு..!
The Puducherry District Administration has imposed a ban on the sale of firecrackers in view of the elections
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 05 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, வரும் 09-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதோடு, மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு, இந்த தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்காக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் வெடிப்பொருள்கள் மற்றும் வெடிமருந்துகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, பொது அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய வெடிப்பொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.
குறிப்பாக, பட்டாசுகள், வெடிமருந்துகள் தயாரித்தல், சேமித்தல் கிடங்குகள் மற்றும் விற்பனை கடைகள் ஏப்ரல் 07 முதல் 10-ஆம் தேதி வரை மற்றும் மே 02 முதல் 05-ஆம் தேதி வரை இயங்க மாட்டாது. அவ்வாறு இந்த ஆணையை மீறி செயல்படுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் காலத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Puducherry District Administration has imposed a ban on the sale of firecrackers in view of the elections