ஏடிஎம் பிழையால் ரூ.10,000 சிக்கியது… நுகர்வோருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு...! - அதிரடி தீர்ப்பு - Seithipunal
Seithipunal


சூரத் நகரைச் சேர்ந்த ஜிதேஷ் குமார் என்பவர், 2017-ம் ஆண்டு எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.10,000 எடுக்க முயன்றபோது பணம் வராத நிலையிலும் அவரது பரோடா வங்கி கணக்கில் இருந்து தொகை கழிக்கப்பட்டது.

இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமும், ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டும் முறையான தீர்வு கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில், பணம் வாடிக்கையாளருக்குச் சென்றடைந்ததற்கான போதிய ஆதாரங்களை வங்கி சமர்ப்பிக்கவில்லை.

மேலும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி 5 நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிக்காததைச் சுட்டிக்காட்டிய ஆணையம், வங்கிக்குக் கடும் அபராதம் விதித்தது.

அதன்படி, ரூ.10,000 தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்கவும், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் மொத்தம் ரூ.3,28,800 இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், மன உளைச்சலுக்காக ரூ.3,000 மற்றும் சட்டச் செலவுகளுக்காக ரூ.2,000 என மொத்தம் சுமார் 3.4 லட்சம் ரூபாயை வழங்க வங்கிக்கு ஆணையம் ஆணையிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10000 Stuck Due ATM Error 3 Lakhs Compensation Consumer Grievance Redressal Commission


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->