உங்கள் வீட்டு கடிகாரம் இந்த திசையில் இருக்கா..? பணத்தட்டுப்பாடு வர இதுதான் காரணமா...?
Is your house clock facing this direction Is this reason financial crisis
வீட்டில் அமைதி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதற்காக பலர் வாஸ்து முறைகளைப் பின்பற்றுகின்றனர். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் எந்த இடத்தில் வைக்கப்படுகிறது என்பதும், எந்த திசையை நோக்கி அமைக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுவர்க் கடிகாரத்திற்கும் இதேபோல் சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன.
அவற்றை முறையாகப் பின்பற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மகிழ்ச்சியும் வளமும் நிலைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.மாறாக, கடிகாரத்தை பொருத்தமற்ற இடங்களில் பொருத்தினால் வீட்டில் தேவையற்ற பதற்றம், குழப்பம் மற்றும் இடையூறுகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே சுவர்க் கடிகாரத்தை எந்த இடங்களில் பொருத்தக் கூடாது என்பதை அறிந்திருப்பது அவசியமாகும்.வீட்டின் பிரதான நுழைவாயிலின் மேற்பகுதியிலோ அல்லது கதவிற்கு நேராக எதிரிலோ சுவர்க் கடிகாரத்தை பொருத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்ட கடிகாரம் வீட்டிற்குள் வரும், வெளியே செல்லும் அனைவரின் மனதிலும் எப்போதும் அவசர உணர்வை உருவாக்கி, மன அமைதியைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் படுக்கையறையில் படுக்கைக்கு நேராக மேல்புறத்திலோ அல்லது தலை வைக்கும் பகுதியின் சுவரிலோ கடிகாரத்தை மாட்டக் கூடாது. இவ்வாறு இருந்தால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதுடன், மன அழுத்தம் அதிகரித்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாஸ்து நெறிகளின்படி தெற்கு திசை மிகவும் கவனத்துடன் அணுகப்பட வேண்டிய திசையாகக் கருதப்படுகிறது. எனவே தெற்குப் பார்த்த சுவரில் சுவர்க் கடிகாரத்தை பொருத்துவது குடும்பத்தினரின் முன்னேற்றத்திலும் உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தெற்கு திசையில் கடிகாரம் இருப்பதால் தொழில் வளர்ச்சி மந்தமடையவும், வருமானத்தில் தடைகள் உருவாகவும், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்க இந்த திசையைத் தவிர்ப்பது நல்லது.
கழிவறைக்கு ஒட்டியுள்ள சுவர்களிலும் சுவர்க் கடிகாரத்தை மாட்டக் கூடாது. ஏனெனில் அப்பகுதியில் உருவாகும் எதிர்மறை ஆற்றல் வீட்டின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று வாஸ்து நெறிகளில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மன அமைதி குறைவதுடன் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மற்றும் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பும் இருப்பதாக நம்பப்படுகிறது.
அதேபோல் ஜன்னல்களின் மேல்பகுதியிலோ அல்லது திறந்த வெளிகளை நோக்கிய சுவர்களிலோ கடிகாரத்தை பொருத்துவதும் ஏற்றதாகக் கருதப்படுவதில்லை. வாஸ்து நெறிகளின்படி வீட்டில் உருவாகும் நல்ல ஆற்றல் வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே நிலைத்திருக்க வேண்டும். ஜன்னலுக்கு அருகில் கடிகாரம் இருந்தால் அந்த நேர்மறை ஆற்றல் வெளியேறிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே சுவர்க் கடிகாரத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கிய சுவர்களில் பொருத்துவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த எளிய மாற்றமே குடும்பத்தில் அமைதி, முன்னேற்றம், பொருளாதார வளம் மற்றும் நல்ல வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Is your house clock facing this direction Is this reason financial crisis