திருமணத்துக்கு முன் அப்படி இப்படி இருக்கலாமா? அப்படி இருந்தா என்ன ஆகும்?  - Seithipunal
Seithipunal


திருமணத்துக்கு முன்பாக தாம்பத்தியம் வைத்துக் கொள்வதால் ஆண் / பெண் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மருத்துவர் ஒருவர் அளித்த பதிவில்,

* வளர் இளம் பருவத்தில் ஆர்வம் மிகுதியால் தாம்பத்தியம் கொள்வதால் அவர்கள் நிகழ்காலம் பாழாவதுடன் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. 

* வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் மறைமுகமாக சில விஷயங்கள் நடப்பதை நம்மால் மறுக்க முடியாது.

* திருமணத்துக்குப் பின் கணவனும் மனைவியுமாக தாம்பத்தியம் வைத்துக் கொள்வதையே நம் சமூகம் அங்கீகரித்திருக்கும். இதுவே பாதுகாப்பானது, ஆரோக்கியமானது. 

* திருமணத்துக்கு முன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நம் கலாச்சாரத்துக்கு எதிரானது. 

* திருமணத்துக்கு முன்பாக பதின் பருவத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. அந்தக் காலகட்டத்தில் உடல் முதிர்ச்சி, மன முதிர்ச்சி இரண்டுமே குறைவாக இருக்கும்.

* 18 வயதுக்கு முன்பாக திருமணம் என்ற உறவுக்கு முன் வைத்துக் கொண்ட தாம்பத்தியம் குழந்தை உருவானால், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு அந்தப் பெண் புகார் தரும் பட்சத்தில் இதற்குக் காரணமான ஆண் சட்டப்படி தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

* இந்த சூழலில் நடக்கும் உடலுறவு இருவரின் மன ஒப்புதலுடன் நடந்தாலும் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயம் நிம்மதியைத் தகர்க்கும்.

* பாதுகாப்பின்றி தாம்பத்தியம் கொள்வதாலும் எச்.ஐ.வி. பால்வினை நோய், சிறுநீரகத் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவில் திருமணத்துக்கு முன்பாக தாம்பத்தியம் தவறில்லை எனும் எண்ணம் அதிகம் உள்ளது. இது தவறானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love and sex


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->