காதல் தோல்வியால்., விபரீத முடிவெடுத்த மாணவி..! இறுதி வீடியோவில் கூறிய வார்த்தைகள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் குங்குமபாளையம் பகுதியை சார்ந்தவர் பிருந்தா (வயது 19). இவர் அங்குள்ள பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வரும் நிலையில், இவர் இதே பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலன் திடீரென மாணவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் நடைபெற்ற உரையாடல்களுக்கு பின்னர் காதலனால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். இதுமட்டுமல்லாது காதலர் மற்றொரு பெண்ணுடன் பேசி வருவதை அறிந்த பிருந்தா விரக்தியடைந்து, வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் வலியை தாங்க இயலாத மாணவி அலறியதை அடுத்து, இவரின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். 

அந்த வாக்குமூலத்தில், சந்தோஷ் என்ற வாலிபரும் - நானும் காதலித்து வந்த நிலையில், என்னிடம் பழகுவதை தொடர்ந்து குறைத்து கொண்டே வந்தார். இதனையடுத்து என்னிடம் பேசுவதை நிறுத்தியதால், காதல் தோல்வியடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டேன் என்று வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிருந்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide for love failure


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal