வேங்கைவயல் விவகாரம் | இதை சாதாரண மனிதர்கள் செய்திருக்க முடியாது - தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருவதாகவும், டி.என்.ஏ பரிசோதனை நாளை நடைபெற உள்ளதாகவும், வேங்கைவயல் விவகாரத்தில் நேரில் சென்று ஆய்வு மற்றும் விசாரணை நடத்தியபின், உயர்நீதிமன்றம் அமைத்த தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணா பேட்டி அளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியவரவில்லை. 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 130 நாட்களை நெருங்கிய நிலையில், இன்றுவரை குற்றவாளியை கண்டறிய முடியாமல் சிபிசிஐடி திணறி வருகின்றது.

இதற்கிடையே, இந்த விவாகரத்தில் சந்தேகிக்கப்படும் 11 பேரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் இரு தினங்களுக்கு முன் பரிசோதனை நடைபெற்றது.

இதில், 3 பேர் மட்டுமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வருகை தந்தனர். வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த எட்டு பேர், நாங்கள் இந்த டிஎன்ஏ பரிசோதனையை செய்து கொள்ள மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்த நிலையில், மேலும் 10 பேருக்கு மரபணு சோதனை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வேங்கை வயல் சம்பவம் குறித்து ஆய்வு ஆலோசனை நடத்திய ஒரு நபர் ஆணைய தலைவர் சத்திய நாராயணன் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அவரின் அந்த பேட்டியில், "வேங்கை வயல் சம்பவத்தில் இயல்பான மனிதர்கள் ஈடுபட்டிருக்க முடியாது. இது ஒரு சிக்கலான வழக்கு. சந்தர்ப்பம், அறிவியல் பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் தான் வழக்கை அணுக முடியும். 

குற்றவாளிகளை கைது செய்யும் செய்வது ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது நமது கடமை" என்று நீதி அரசர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vengaivayal issue 06052023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->