வேலூர் மாவட்டத்தில் 16 பேர் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராகினர்.! - Seithipunal
Seithipunal


9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள சாதாரணத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்புமனுக்களின் விவரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கருக்கு சாதாரணத் தேர்தலுக்கான அறிவிப்பு 13.09.2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. 

தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்று கொண்டனர். 

2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம மராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 

இதில், வேலூர் மாவட்டத்தில் 2,478 உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இறுதியாக 6,547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு களத்தில் 70 பேர் உள்ளனர். 138 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 136 பதவிக்கு 503 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 

247 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 231 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 820 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,079 பதவிக்கு 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள பதவிக்கு 5,154 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore local body election


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal